Sunday, 20 September 2015

One shot

செம்மை கலக்க மணலும்
வெம்மை தணிக்க மழையும்
பச்சை விரிக்க படர்கொடியும்
கதிரவன் வெளிக்க சில நொடியும்
மென்தென்றல் என் வன்மம் போக்கி
சூழப்பருவதங்கள் இந்நிலம் தேக்கி
எம்மவர் அமரும் திசை வசை சொல்லி இளந்தென்றல் இசை மறுபுறம் நானமர்ந்தேன் Fox hill
புல்லொடிய கால்மடிய
வான்வில்லொடிய அமர
விசில் அடியில்
எமக்கொரு இடி விழ
சலாமா நிகழ்வில்
நலமாய் வந்த எமக்கு
பலமாய் பல் பயிற்ச்சி தர

வலமாய் என் கரம் கடுக்குதே
மேலும் காலும் நீளும் ஆளும்
மேலும் கீழும் தாழும் எழும்
தோலும் தாளும் கிழியும் போலும்
வலியும் கிலியும் கூடும்
விழி கூசும் ஒளியும்
செவி கிழியும் ஒலியும்
எம் பயிற்ச்சித்திடலில் நெளியும்
அத்தருணம் one shot
சொல்லடி கல்லடி
வில்லடி பொல்லடி
என எல்லா அடியும்
முடியுமுன் எண்ணமொன்று
எழுந்தது என்னுள்ளே
இது முடியாதா? இல்லை விடியாதா?
அச்சம் நீக்கி தம்மை
துச்சமாய் எண்ணி
மிச்சம் தோழரை நம்பி
உச்சம்மிருந்து வீழ்த்த
ஆகா... அருமை தாரிக்,
ரிம்ஸான் மூக்கும் நாக்கும்
வெட்டிய பச்சை பாக்கானது.
யாவையும் நிறைவுற பூவைப்பாவையராய்
பலரும் நாடகமாட
நடந்து முடிந்தது சமரெனும் சமர்
நீந்தி நீராடி நீருக்கள் போராடி
நீருக்குள் வேரோடினோமே!
பாருக்குள் புது ஊருக்குள்
பழகினோமே!
எல்லாம் வெல்லமாய் இனிக்கும்
மெல்லமாய் சான்றிதழ் பெற்று
சற்றே உற்சாகம் பெற்று
ஒரே கிண்ணத்தை நம்மவர் நால்வருமே பெற்றனரே!

1 comment: