அழலும் சில தருணம் நிழல் தரும்
அறபுகள் மட்டும் நிழல் தரமறுப்பதேன்?
அறபுகளுக்குள் இழையோடிய
இறுமாப்பும் வரட்டு கௌரவமும்
இளம்பிஞ்சுகளை காக்கைக்கும்
கழுகுக்கும் கட்டெறும்பிற்கும்
இரையாக்கிவிட்டது.
அறபுகள் மட்டும் நிழல் தரமறுப்பதேன்?
அறபுகளுக்குள் இழையோடிய
இறுமாப்பும் வரட்டு கௌரவமும்
இளம்பிஞ்சுகளை காக்கைக்கும்
கழுகுக்கும் கட்டெறும்பிற்கும்
இரையாக்கிவிட்டது.
அநாதரவாய் அலைக்கழிந்து
அடைக்கலம் கேட்டவனுக்கும்
கொஞ்சம் உன்வீட்டறையில்
தஞ்சம் கொடு என செப்பிய செம்மலும் அறபுதான்.
அடைக்கலம் கேட்டவனுக்கும்
கொஞ்சம் உன்வீட்டறையில்
தஞ்சம் கொடு என செப்பிய செம்மலும் அறபுதான்.
அக்கிரம அநியாய அட்டூழியம்
அரங்கேறும் அத்தனையையும்
அருகிருந்து அமர்ந்திருந்து
அழகுபார்க்கும் அறபுகளுக்கு
அருகியது அறிவு கருகியது காதல்
இறுகியது இரக்கம் ஆனால்
உருகியது உலகம்.
அரங்கேறும் அத்தனையையும்
அருகிருந்து அமர்ந்திருந்து
அழகுபார்க்கும் அறபுகளுக்கு
அருகியது அறிவு கருகியது காதல்
இறுகியது இரக்கம் ஆனால்
உருகியது உலகம்.
ஞாலத்தில் நரகம்தான் நமதூர்
நரகம்தான் நமதன்னை
நரகம்தான் நம்முறவுகள் எனில்
ஞாலத்தில் சுவனம் நமக்கெதற்கு
நரகம்தான் நமதன்னை
நரகம்தான் நம்முறவுகள் எனில்
ஞாலத்தில் சுவனம் நமக்கெதற்கு
சுபசோபன சுகபோகங்களும்
சுந்தரங்களும் சுந்தரிகளும்
சுந்தரமாய் வலம் வரும்
சுவனத்தில் வாழ்ந்தாலும்
தாயகத்தில் வாழ்வதுபோல்
சுகம் கிடையாது.
சுந்தரங்களும் சுந்தரிகளும்
சுந்தரமாய் வலம் வரும்
சுவனத்தில் வாழ்ந்தாலும்
தாயகத்தில் வாழ்வதுபோல்
சுகம் கிடையாது.
அறபுதான் நமதூர்
அறபுதான் நமதன்னை
அறபுதான் நம்முறவு என்றால்
அறபுப்பிணம் எதற்கு
ஐரோப்பாவில் தஞ்சம்.
அறபுதான் நமதன்னை
அறபுதான் நம்முறவு என்றால்
அறபுப்பிணம் எதற்கு
ஐரோப்பாவில் தஞ்சம்.
பள்ளி செல்ல பருவம் மெல்ல
துள்ளி விளையாட உருவம் நல்ல
பிள்ளை சின்னவன் அவன்
இழைத்த தவறென்ன???
துள்ளி விளையாட உருவம் நல்ல
பிள்ளை சின்னவன் அவன்
இழைத்த தவறென்ன???
அசதும் ஐ.எஸ்.அரசும்
மல்யுத்தம் செய்ய
இவன் எதற்கு மாண்டு போக
முக்காலத்திலும் ஏன்
எக்காலத்திலும் ஏற்காதே
இதனை இத்தரணி
மல்யுத்தம் செய்ய
இவன் எதற்கு மாண்டு போக
முக்காலத்திலும் ஏன்
எக்காலத்திலும் ஏற்காதே
இதனை இத்தரணி
தேசச்சண்டை அவசியம்
யுத்தம் அத்தியவசியம்
அழிந்து போன அனாதை
சிறுவன் அனாவசியம்
யுத்தம் அத்தியவசியம்
அழிந்து போன அனாதை
சிறுவன் அனாவசியம்
ஐ.நா.. அநியாயம் கண்டு அவதானம்
நியாயம் சொல்ல மட்டும் நிதானம்
ஐ.நா உனக்கிது அவமானம்
முதலில் உனக்கேது தன்மானம்
நியாயம் சொல்ல மட்டும் நிதானம்
ஐ.நா உனக்கிது அவமானம்
முதலில் உனக்கேது தன்மானம்
அன்னையும் அப்பனும் அக்கறை
கொண்டென்ன?
அறபுக்கே அக்கறை இல்லை அப்புறம் என்ன?
ஆழ்கடலுக்கு அக்கறை அதனால்
அள்ளியெடுத்து அரவணைத்து
ஐரோப்பாவிடம் கொண்டு வைத்து
அறபிடம் இருந்து தள்ளி வைத்துவிட்டது.
கொண்டென்ன?
அறபுக்கே அக்கறை இல்லை அப்புறம் என்ன?
ஆழ்கடலுக்கு அக்கறை அதனால்
அள்ளியெடுத்து அரவணைத்து
ஐரோப்பாவிடம் கொண்டு வைத்து
அறபிடம் இருந்து தள்ளி வைத்துவிட்டது.
ஆழ்கடலன்னை ஆழிக்குத்தெரியும்
அறபுக்கு போனால் அவன் உடல்
அலைக்கழியும் அதானால்தான்
அறபிடம் இருந்து அப்புறப்டுத்தி
அறபே இல்லா தேசத்தில் அவனுக்கு சுவனம்.
அறபுக்கு போனால் அவன் உடல்
அலைக்கழியும் அதானால்தான்
அறபிடம் இருந்து அப்புறப்டுத்தி
அறபே இல்லா தேசத்தில் அவனுக்கு சுவனம்.
சிரிய சிறுவனுக்கு இது அர்ப்பணம்.

No comments:
Post a Comment