Friday, 17 October 2014

தண்ணீர்

நித்தியமாய் இறைவன் சோதிப்பான்
சத்தியமாய் இறைமறை போதிப்போம்
நாம் பத்தியம்  காத்து சாதிப்போம்
கற்பிடித்து கவன் எடுத்து
விற்பிடித்து அம்பெடுத்து
எமக்கெதிராய் எய்தாலும்
இறைநற்படிப்பால் பற்கடித்து பொறுத்திருப்போம்
அக்கினியில் நடந்தாலும்
தீனி இல்லாது கிடந்தாலும்
ஆறாப்பிணி தொடர்ந்தாலும்
அஹிம்சை எமது பணி தொடரும
காட்டாறு கூட்டாகி எம்மை
கூட்டோடு அழிக்க முயன்றாலும்
நாட்டோடும் வீட்டோடும்
அயோக்கியம்  அழித்து ஐக்கியமாய் புறப்படுவோம்
அநீதிக்கெதிராய்  எம் குரல் ஒலிக்கும்
நீதியே உலகினில் ஜொலிக்கும்
முதலில் நெல்லக்னி புளிக்கும் பின்னர் இனிக்கும்்
நாம் தண்ணீர்  குளிர் ந்தே இருப்போம்
எம்மை எரிக்க எவர்  வருவார்
நாம் எரிந்தால் அணைக்க எவர் வருவார்
நாம் குளிர்ந்திருந்தால் செஞ்செழிப்பீர்
நாம் கொந்தளித்தால் நீர்  தத்தளிப்பீர்
அதனல் நாம் தண்ணீர்

No comments:

Post a Comment