Monday, 3 February 2014

ஐக்கியம்



ஐக்கியம்      


ஐக்கியமும் சகவாழ்வும்
சாந்தி நெறியின் சத்தியத்தூது
வேற்றுமையும் நயவஞ்சகமும்
நரக விஷப்பாம்பு       

ஊருடன் பகைத்தாயின்
வேருடன் கெட்டோம்
நற்குணமிழந்தோம் நாடு
பகைத்தோம்
நாதியற்று நடுவீதிக்கு வந்தோம்
நாணமிழந்து நகைத்தோம்


கூட்டுறவும் வீட்டுறவும்
நாட்டுறவும் நல்லுறவாகும்
என்றால் நாயுறவும் பேயுறவும்
நம்மை வெல்லுமுறமாகுமா?


 அந்நியன் அந்நியன் என்று
அந்நியம் என்ன கண்டோம்
கன்னியம் இழந்தோம்
கடமை மறந்தோம்

சிறு எறும்பு ஒரு துரும்புச்
சோறாயினும் சேர்ந்தே திண்ணும்
பறக்கும் காகமும் பகிர்ந்தே உண்ணும்


 சிந்தையற்ற தந்தை மந்தையென்று
எண்ணி மகனை விலைபேசியது போதும்
தாய் நாட்டை நாளாய் பிளந்தது போதும்
ஒரு வீட்டில் நடுச்சுவர் எழுப்பியது போதும்


 தினம் கொன்று தீர்த்தது போதும்
கொலையை மென்று சுவைத்தது போதும்


நாள்தோறும் ரணங்கள்
புரிந்து பிணங்கள்
குவித்து போதும் இனிமேல் இல்லை
குவிப்பதற்கு ஏதும்

வேற்றுமை எனும் மடமை மறப்போம்
ஒற்றுமையெனும் கடமை உணர்வோம்
பிணக்குகள் புரியாது வழக்குகள்
தொடராது வாழ்வோம்

ஒற்றுமை உதிக்கும் கிழக்குகளாய்
மாறுவோம் நாம்
அசத்தியம் அழியட்டும்
தொலையட்டும் துவேசம்

தூங்கும் ஐக்கியம்
வானுயர ஓங்கட்டும்
உண்மை நிலைக்க
மௌனம் அழைக்க
வன்மை களைக்க

சூழ்சிகள் கனதியற்று
வீழ்ந்து போக
தூர்ந்து போக
ஒரே கங்கையில் கலந்து
ஒரே கடல் சுவனம்
அதை சுவைக்க  வாரீர்  (சிந்தை-உள்ளம்
)

No comments:

Post a Comment