உதட்டொன்று கொண்டு
பகட்டொன்று பேசும் பலரிற்கு
புகட்டும் பாடமொன்றில்
உருத்த வேண்டும் மனம்
குமட்டும்படி பலர் செயல்
குணமிழநது தரங்குன்றையிலே
குளத்தோர மணமலரின்
குணமென்று கூறுவதாகுமோ?
ஐந்தாறாண்டு என்று
பைந்தாமரையென பழகி -ஒரே
மைந்தர் நாமென்ற நாமாம்
ஐந்தாறு தினத்தில் அழிந்ததாமோ?
ஆறுவதெல்லாம் அன்பு
ஊறுவதெல்லாம் வஞ்சகம்
கூறுவதெல்லாம் பொய்
மாறுவது என்னவோ? மனம்
நாறுவது நம்மதப்பெயர்
சீறுவது சினம் -பிரிந்தோம்
நூறாய் அந்நியன் கண்டால்
காறியு மிழுவான் கவனம்
No comments:
Post a Comment