Friday, 16 October 2015

சீயங்களின் சீவியம்

பூமியில் பரவி விரவி ஓட
குதிரை புரவி பரவி பறக்குதே
புவி உலவி பரவி விரவி கலவி
கிடக்க புது குழவி பிறக்குதே

என்னதான் கலவி உலகு உலவி
விரவி வியாபித்து பரவிபடர்ந்தாலும்
கவினுறு குழவி ஒழுங்காய் பெறத்தெரியாது அதனால் உலகில்
உலவுது கல்விக்கலவி

கலவியில் குழவிகண்டு
புதுமை கண்டு முதுமையுண்டவன்
சிலன் பிறவி மறந்து
உறவு தொலைத்து துறவியானான்

ஞாலத்திற்கொரு கேவலம்
ஆளத்தெரியாதவனும் வாழத்தெரியாதவனும்
ஆலமுண்டு மாளலாமே! மண்ணறையில் வாழலாமே!
ஆனால் மானமிழந்து தாழலாமோ?
கட்டிய மனையாள் அயலானுடன் ஒட்டியென்ன வாழலாமோ?

வாழவந்தவளுக்கு வரமளிப்பதாய்
சொல்லி வரதட்சனை எடுக்கும்
உனக்கெதற்கு சீவியம்?
சீதனம் எனச்சொல்லி ஆதனங்கள்
பெறுகிறாயே சீதனம் என்பது
யாதெனப்பொருள் தெரியுமா?
சீ....அவள் தனம் இனி உனக்கு
முகரவும் நுகரவும் பகிரவும் தடை

சிற்றிடையூடு போய்சிறு
சிசு சிரஷ்டிக்கத்தெரியாதவனுக்கு
சீவனோபாயமும் உடற்சீவனும் இருந்தாலும் சீவிக்கத்தெரியாதவனே!

அதரம் அருந்தி உதரம் உதைக்க
சிறு சிசு சமைக்க சீவியத்திற்கு மட்டும் சீவனோபயம் இல்லையெனில்  அவனும் சீவிக்கத்தெரியாதவனே!

இதனைத்தானே ஔவை சொன்னாளாம்
இல்லானை இல்லாளும் வேண்டாள்
ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்
இல்லான் சொல்லு வெறும்செல்லாக்காசென்று
இனி எத்தனை பொல்லாங்கு சொன்னாலும் செல்லாக்காசு எனும்
ஔவை உவமைதான் இல்லாமற்போகுமோ?

பிள்ளைபெறத்தெரியும்
காசுபணம் பெறத்தெரியும்
ஒழுக்கம் விழுப்பம் தருமாமே
அதனை ஓம்பத்தெரியாது
ஊர் உலகெல்லாம் ஓங்கரித்து ஒழுகியது போல்  வடிகிறது வர்த்த பிள்ளை வறுவாய்.
வளர்க்கத்தெரியாமல் வளர்த்ததால்
வந்தது வினை அதனால் கெடுவாய்

நறுமணம் கமழும் திரூமணம்
இருமணம் இணைந்து நிகழ்த்திவிட்டு ஏனடா நீ ஒருத்தனாய் வீட்டிலும்
ஒருத்தியாய் அவள் வெளிநாட்டிலும்
பிழைக்கத்தெரியாத உனக்கெதற்கு
சீவியம்? வாக்கில் மட்டும் சீயம்
உன் வாழ்வோ பூஜியம்
எங்கே உன் மனச்சாட்சியம்.

ஆண்டவன் சங்கை செய்த மங்கை கொங்கையை விற்றுவிட்டு
அதில் வரும் ஊதியம் பெற்றுவிட்டு
கணக்குப்பிள்ளை ஆநாயாய் ஓநாயாய்ய் ஆனாயே நீயே நாயே
சீவியம் உஉனக்கெதற்கு?

தவங்கித்தவங்கியே பட்டினி
பத்தினி முத்து நீ பத்துத்திங்கள் சுமந்து புத்திரனை பெற்றெடுக்க
பத்து நொடியில் விற்றுவிட்டு
வீடுபோகும் உனக்கெதற்கு சீவியம்?

மாமன் மாமியோடு சிறு சாமான் வாங்க தர்க்கம் உறவோடு ஒட்ட ஒழுகல் சொட்டும் அறியாத அழுகல் உனக்கெதற்கு சீவியம்?

மனச்சாட்சியமுள்ளவன் சீவியம்
சீயத்தின் இராட்சியம்
மணக்க வேண்டும் அது உலகுக்கே
முதலுதாரணமாய் முன்னுதாதாரணமாய் மணக்க வேண்டும்

சீதனம் இறக்க வேண்டும்
ஆதனம் இருக்க வேண்டும்
மூலதனம் உழைக்க வேண்டும்
கூடியிருக்க வேண்டும்

பிள்ளை பிறக்க வேண்டும்
அமைதி உறக்கம் வேண்டும்
கலவியில் கலக்க வேண்டும்
புலவியில் புலக்க வேண்டும்
உறவுகளுடன் ஒழுக வேண்டும்
ஆலோசனை அவர்களுக்குள் பிறக்க வேண்டும்.
குதூகலமாய் புது ஞாலத்தில்
கூடியிருந்து பசுவில் பால் கறக்க வேண்டும்.

விரவி-பரவி
புரவி-பிடரிமயிர்
கலவி-கூடல்
புலவி-ஊடல்
குழவி-குழந்தை
ஆலம்-நஞ்சு
மாளுதல்-மரித்தல்
இடை-இடுப்பு
சீயம்-சிங்கம்
சீவியம்-வாழ்கை
தனம்-கொங்கை
அதரம்-உதடு
உதரம்-வயிறு
ஓங்கரித்தல்-வாந்தியெடுத்தல்
தவங்குதல்-தவமிருத்தல்

No comments:

Post a Comment