Friday, 27 February 2015

வேண்டாம்


பாரராளும் பரம விரோதியே
பாராளு மன்றத்தில் பாவையர்
பலரின் ஊராள ஊசிதமாய்
உகந்ததொரு ஊகமிட்டு
உதரம் கிழித்து உதிரம்
உறிஞ்சிக்குடித்து . குன்றென
கீர்தி கொண்ட கீழ் சாதி
கொடுங்கோல அமரிக்காவே!

கொண்டது விடாமை ni
மூர்கர் இயல்பு.பார்
கண்டது பலநூறாயிரம்
ஆண்டு முன்னே!




பரிசுத்த பலவான்களை
பலவீனமெனப்பரிகசித்து
பறை அறைந்து பாரெங்கும்
படர வைத்தாய் இடரை
தொடர வைத்தாய்


எங்கள் எவரையும் ஏளனிக்க வேண்டம்
எம் நாட்டை எண்ணி எக்களிக்க வேண்டாம்
எம் மாதர் மேல் எருக்களிக்க வேண்டாம்
எம் மங்கையர் கொங்கைகளை ஏலமிட வேண்டாம்
யூதனே! புவியடக்கும் பூதமென உன்னை உன்ன வேண்டாம்
ஈற்றில் எல்லாம் ஏகன் படைத்த ஜீவி என்றிடலை மறக்க வேண்டாம்

(உதரம்-வயிறு,உதிரம்-குருதி,கீர்தி-புகழ்,பார்-உலகு, இடர்-துயர், எக்களிப்பு-ஆணவச்சிரிப்பு,எருக்களித்தல்

No comments:

Post a Comment